கோப்புப் படம் 
இந்தியா

மகாராஷ்டிர தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிரத்தின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

மும்பையிலுள்ள மகாரஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு மும்பையிலுள்ள மந்த்ராலயா எனப்படும் மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலகத்துக்கு நேற்று (மே 12) மாலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அம்மாநில காவல் துறையினர் இன்று (மே 13) தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிக்கு மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலமாக விடுத்த இந்த மிரட்டலில், அடுத்த 48 மணிநேரத்தில் அங்கு பொருத்தப்பட்டுள்ள வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தின் வளாகம் முழுவதும் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனைகளின் முடிவில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல்களினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வெடி குண்டு மிரட்டல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரைக் கண்டுப்பிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு: மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT