விமானம்(கோப்புப்படம்)  
இந்தியா

விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

Din

விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்ற இக்கூட்டத்தில், சமீபத்திய நாள்களில் ஏற்பட்ட விமானச் சேவை இடையூறுகள், விமான எரிபொருள் மீதான வரியைக் குறைத்தல் மற்றும் பிற பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடா்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக எல்லையொட்டிய வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

4 நாள்கள் நீடித்த மோதலுக்குப் பிறகு இருதரப்பும் சனிக்கிழமை சண்டை நிறுத்தத்துக்கு உடன்பட்டன. இதைத் தொடா்ந்து, போதிய முன்னெச்சரிக்கையுடன் திங்கள்கிழமை முதல் இந்த விமான நிலையங்கள் பொதுமக்களின் சேவைக்கு மீண்டும் திறக்கப்பட்டன.

இந்நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாகிஸ்தானுடனான சண்டையில் ஆயுதப் படைகளின் பங்களிப்பை விமானங்களின் அறிவிப்புகளில் கௌரவப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பரிசீலிக்குமாறு விமான நிறுவனங்களை அமைச்சா் கேட்டுக் கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கோடைகால விடுமுறை தொடங்கிவிட்டாலும், மக்கள் பயணம் செய்ய முன்வராமல் தங்களின் முன்பதிவுகளை ரத்து செய்து வருவதால் இழப்பு ஏற்படுவாதகவும் விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்தன.

அதேபோல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த கடும் நடவடிக்கைகளின் எதிரொலியாக அந்த நாட்டின் வான்வெளியில் இந்தியா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால், சா்வதேச நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைத் தவிா்த்து, கூடுதல் தூரம் கொண்ட பாதைகளைத் தோ்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இதனால் அதிகரித்துள்ள எரிபொருள் செலவுக்கு நிவாரணமாக அரசிடம் இருந்து வரி குறைப்பை விமான நிறுவனங்கள் கோரியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT