இந்தியா

இந்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்வு!

இந்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்ந்துள்ளது.

DIN

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, இந்த 2024 - 25ஆம் நிதியாண்டில் ரூ.23,622 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுவே கடந்த ஆண்டு ரூ.21,083 கோடியாக இருந்ததும், தற்போது ரூ.2,539 கோடி அளவுக்கு அதாவது 12.04 சதவீதம் உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி கவனம் பெற்றுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை ஏற்பட்டுத. இது நான்கு நாள்களுக்குப் பிறகு இருதரப்பும் ஒப்புக்கொண்டு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில்தான், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியின் நிலையை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியா வரும் 2029ஆம் ஆண்டில் சுமார் 80 உலக நாடுகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற வகையில், அதன் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்பதே இலக்கு. கடந்த 2013 - 14ஆம் ஆண்டில் இருந்த ரூ.686 கோடி என்பது 2024 - 25ஆம் ஆண்டில் ரூ.23,622 கோடியாக அதாவது 34 மடங்கு அதிகரித்துள்ளது என்று பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

எந்தன் நெஞ்சில் நீங்காத... பாவனா!

உன்னோடு நானும்... ஜெனிலியா!

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

SCROLL FOR NEXT