இந்தியா

மாணவர்களைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி! தடுத்து நிறுத்திய காவல்துறை!

மாணவர்களைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தியை பிகார் காவல்துறை தடுத்து நிறுத்தியது பற்றி...

DIN

பிகார் மாநிலம் தர்பங்காவில் மாணவர்களைச் சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

பிகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் அம்பேத்கர் விடுதி மாணவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்துரையாடவிருந்தார்.

இதற்காக மாணவர்களைச் சந்திக்கச் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனால் காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

எனினும் காவல்துறை தடையை மீறி ராகுல் காந்தி நடந்தே சென்று மாணவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

"பிகார் காவல்துறை என்னைத் தடுக்க முயன்றது. ஆனால் அவர்களால் என்னைத் தடுக்க முடியவில்லை. ஏனென்றால் மாணவர்களாகிய உங்கள் சக்தி என்னைக் கண்காணித்து கொண்டிருக்கிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறினோம். உங்களுடைய அழுத்தத்தினால் சாதி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்" என்று பேசியுள்ளார்.

மேலும் "தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைச் சந்திக்க பிகார் அரசு என்னைத் தடுக்கிறது.

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஜி, ஏன் பயப்படுகிறீர்கள்? மாநிலத்தின் கல்வியையும் சமூக நீதியையும் மறைக்கப் பார்க்கிறீர்களா?" என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT