மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலிபான் அமைச்சருடன் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடினார். 
இந்தியா

தலிபான் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

தலிபான் அரசுடன் உயர்மட்ட உரையாடல் மேற்கொள்ளப்பட்டதைப் பற்றி...

DIN

தலிபான் அமைச்சருடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மவ்லாவி அமிர் கான் முத்தாகியுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (மே 16) தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளார்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட உரையாடலின் மூலம் அவரது கண்டனங்களுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தனது எக்ஸ் வலைதளத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:

”இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் உறவுக்கு இடையில் அவநம்பிக்கையை உருவாக்க வெளியான ஆதாரமற்ற பொய்யான அறிக்கைகளை அமைச்சர் முத்தாகி நிராகரித்துள்ளதை நான் வரவேற்றுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த உரையாடலில் ஆப்கன் மக்களுடனான இந்தியாவின் பாரம்பரிய நட்புறவையும், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில் இந்திய அரசின் பங்களிப்பையும் மேற்கொள்காட்டியுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர்: 3 நாள்களில் 6 முக்கிய பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவம் அமைக்க கோரிக்கை

ரஷிய தொழிற்சாலையில் தீ: 11 போ் உயிரிழப்பு

வாடல் நோயிலிருந்து வாழையை காக்கும் வழிமுறைகள் விளக்கம்

பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய 2 இளைஞா்கள் கைது

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: டி.ராஜா

SCROLL FOR NEXT