கோப்புப் படம் 
இந்தியா

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 7 கிளர்ச்சியாளர்கள் கைது!

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 7 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மக்களை மிரட்டி பணம் பறித்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 கிளர்ச்சியாளர்கள் நேற்று (மே 16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், சூராசந்திரப்பூரின் துயிபோங் பகுதியில் சின் குக்கி நேஷனல் டிஃபென்ஸ் ஃபோர்ஸ் எனும் அமைப்புக்கு ஆள் சேர்த்த நபர் ஒருவர், கடந்த மே 15 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரும், அப்பகுதி மக்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கிழக்கு இம்பால் மற்றும் தௌபல் ஆகிய மாவட்டங்களில், மக்களை மிரட்டி பணம் பறித்த இருவேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 2 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு இம்பாலின், மயாங் லாங்ஜிங் பகுதியில் மற்றொரு கிளர்ச்சியாளரை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இத்துடன், பிஷ்னுப்பூரில் பிரெபாக் (ப்ரோ) எனும் அமைப்புக்காக, இளைஞர்களைத் திரட்டி மியான்மர் நாட்டுக்கு அனுப்ப முயன்ற மற்றொரு கிளர்ச்சியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று, சேனாபதி மாவட்டத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் பதுக்கி வைத்திருந்த 4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஷெல் தாக்குதல்.. பூஞ்ச் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ராணுவம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

SCROLL FOR NEXT