மணிப்பூரில் இரண்டு பெண்கள் உட்பட 3 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தெங்நுபால் மாவட்டத்தில் உள்ள சன்ரைஸ் திடலுக்கு அருகே இருந்து தடைசெய்யப்பட்ட அமைப்பான மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த இரண்டு பெண் போராளிகளைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
அவர்கள் அகோய்ஜாம் சகென்பி (23) மற்றும் சோங்தம் ஹெம்பபி (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேபோல் தடைசெய்யப்பட்ட ப்ரீபாக் (புரோ) அமைப்பைச் சேர்ந்த ஒரு போராளி இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நாபெட்பள்ளியில் கைது செய்யப்பட்டார். அவர் இங்குடம் இங்கோச்சா சிங் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
மேலும் அவரிடம் இருந்து ஐந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட பிஸ்டல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள சிஜாங் குக்கி கிராமத்திற்கு அருகில் 10 கிலோ ஐஇடியை(நாட்டு வெடிகுண்டு) பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரால் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Security forces arrested two women cadres of the banned outfit People's Liberation Army (PLA) from the vicinity of Sunrise Ground in Tengnoupal district.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.