அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் AP
இந்தியா

அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!

அமெரிக்கா மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

அமெரிக்கா மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவதில்லை என்று கூறியதால்தான், இந்தியா போரைக் கைவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கவிருப்பதாக டிரம்ப் கூறியிருப்பது, மீண்டுமொரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்களும் வர்த்தகர்களும் கூறுகின்றனர்.

இதுகுறித்து, செய்தி நிறுவனத்திடம் டிரம்ப் தெரிவித்ததாவது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அமெரிக்க பொருள்கள் மீதான வரியைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது. தடைகளை அகற்றும் நாடுகளில் இந்தியாதான் சிறந்த நாடு.

அமெரிக்காவுடன் வர்த்தகம் புரிய இந்தியா விரும்புகிறது. வர்த்தகத்தைப் பயன்படுத்தித்தான், அவர்களின் பகையைத் தீர்த்து வைத்தேன். அமெரிக்காவுடன் வர்த்தகம் புரிய அனைத்து நாடுகளும் விரும்புகின்றனர். ஆனால், அனைவருடனும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

சீனாவுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அவர்களும் இறக்குமதி வரியைக் குறைத்துள்ளனர். அவ்வாறு செய்யவில்லையெனில், சீனா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

இருப்பினும், அமெரிக்கா மீதான இந்தியாவின் வரிகுறைப்பு நடவடிக்கையாக டிரம்ப் கூறியது குறித்து, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT