இந்தியா

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருடு போனது பற்றி...

DIN

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் மாளிகையில் சுதர்ம பவன் என்ற வளாகத்தில் கடந்த மே 14 ஆம் தேதி ஆவணங்கள் கலைந்து கிடந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில் தலைக்கவசம் அணிந்த ஒருவர் ஆளுநர் மாளிகைக்குள் புகுந்து, ஆவணங்கள் மற்றும் 4 முக்கிய ஹார்ட் டிஸ்க்குகளை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ஆளுநர் மாளிகை ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்தின் பேரில் ஆளுநர் மாளிகையின் கணினி ஹார்ட்வேர் பொறியாளர் ஸ்ரீனிவாஸ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஸ்ரீனிவாஸ் குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருடுபோன ஹார்ட் டிஸ்க்கில் உள்ள தரவுகளை ஆராய்ந்து வரும் காவல்துறையினர், திருடுக்கான காரணத்தையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

தேசிய புகைப்பட நாள் விழா போட்டியில் தஞ்சாவூா் கலைஞருக்கு விருது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ. 20.70 லட்சம் மோசடி

இன்றைய நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT