கைது 
இந்தியா

குடிபோதையில் தாயை மிதித்து கொன்ற மகன்: கேரளத்தில் அதிர்ச்சி!

குடிபோதையில் தாயைக் காலால் மிதித்தேக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தெற்கு கேரளத்தில் குடிபோதையில் தாயைக் காலால் மிதித்தேக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,

நெடுமங்காடு அருகே உள்ள தேக்கடாவைச் சேர்ந்தவர் ஓமனா (85). இவரின் மகன் மணிகண்டன். இவர் தினமும் குடிப்பதும், இரவில் தன் தாயிடம் வந்து பிரச்னை செய்வதும் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார் மணிகண்டன். அளவுக்கு மீறிய குடிபோதையில் இருந்ததால் தனது தாயாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அவரை காலால் மிதித்ததில் பலத்த காயங்கள் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஓமனாவின் உடலில் பல எலும்பு முறிவுகள் காணப்பட்டதாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் ஓமனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, வட்டப்பாரா நிலைய போலீஸார் மணிகண்டனை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

SCROLL FOR NEXT