வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (கோப்புப்படம்) 
இந்தியா

பயங்கரவாதிகளைத் தேடிச் சென்று அழிப்போம்: ஜெய்சங்கர்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கருத்து...

DIN

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று அழிப்போம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடையே நீடித்த போா்ப்பதற்றம் தணிந்துள்ள நிலையில், அதன்பிறகு ஜெய்சங்கா் முதல் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தொடா்ந்து டென்மாா்க், ஜொ்மனி ஆகிய மேலும் 2 ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லவும் அவா் திட்டமிட்டுள்ளாா். இந்தப் பயணத்தில் மூன்று நாடுகளின் தலைவா்களையும் ஜெய்சங்கா் சந்திக்கிறாா். அவர்களிடம் இந்தியா தொடங்கிய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்தும் ஜெய்சங்கர் விளக்கமளிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஜெய்சங்கர் இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதிகள் தளங்களைதான் தாக்கினோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பட்டியலில், முக்கிய பயங்கரவாதிகள், அவர்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் செயல்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.

ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை. பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவம் நடந்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம். பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தாலும் தேடிச் சென்று அழிப்போம். அதனால், ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு மட்டுமே இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதை அறிந்திருதோம். மே 10 ஆம் தேதி பாகிஸ்தானின் 8 விமானப்படைத் தளங்களை குறிவைத்து தாக்கினோம். விமான ஓடுதளம், விமான கட்டுப்பாட்டு மையத்தை அழித்தோம். துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும் என்ற கட்டாயத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆளானதைத் தொடர்ந்து மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் நடக்கிறதா? அரசுத் திட்டங்கள் பெயரில் பண மோசடி!

“Karur பற்றிய கேள்விகளைத் தவிர்க்கலாம்!” செந்தில் பாலாஜி காட்டம்! | DMK | TVK | VIJAY

மோலிவுட்டிலிருந்து... அஸ்வதி!

சொந்த ஊரில் கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்!

டார்ஜிலிங்கில் நிலச்சரிவு: 7 பேர் பலி; பலர் மாயம்! - பிரதமர் மோடி இரங்கல்

SCROLL FOR NEXT