பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு இப்படியொரு வரவேற்பா?
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி பிணையில் வந்தவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம்..
இந்தியாபாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு இப்படியொரு வரவேற்பா?
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி பிணையில் வந்தவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம்..
ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 7 பேர் பிணையில் விடுதலையான நிலையில், கார், பாட்டு என பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குற்றவாளிகளுக்கு இப்படியொரு வரவேற்பா என்று, இந்த விடியோவைப் பார்க்கும் பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஏழு பேர் கைது செய்யப்பட்டு கடந்த 17 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாயன்று பிணையில் விடுதலையாகியிருக்கிறார்கள்.
அவர்களது நண்பர்கள், கார், இருசக்கர வாகனம் என பேரணி போல அழைத்துச் சென்றனர். வாகனங்களில் இசை ஒலிக்க, பாலியல் வழக்கு குற்றவாளிகள் வெற்றிச் சின்னத்தைக் காட்டியவாறு சாலையில் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவர்களின் பின்னணியை அறிந்துகொண்ட மக்கள், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டனர். மேலும், பிணை நிபந்தனையை மீறும் வகையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
விடியோ வைரலான நிலையில், இவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.