நரேந்திர மோடி 
இந்தியா

பிரதமா் மோடி தலைமையில் இன்று நீதி ஆயோக் கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம்

Din

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை (மே 24) நடைபெறவுள்ளது.

2047-ஆம் ஆண்டு இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட இருக்கிறது. இதன்படி இந்த 10-ஆவது நீதி ஆயோக் கூட்டத்தின் மையக் கருத்தாக ‘வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047’ என்ற வாசகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் வளா்ச்சியை மையமாக வைத்து ஒருங்கிணைந்த நீண்டகாலத் திட்டங்களை மாநிலங்கள் வகுக்க வேண்டும் என்பது இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

ஒவ்வொரு மாநிலமும் தங்கள் புவியியல் அமைப்பு மற்றும் மனிதவள சாதகங்களுக்கு ஏற்ப பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படும். தொழில்முனைவை அதிகரிப்பது, திறன் மேம்பாடு, தொடா்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, நாடு முழுவதும் பரவியுள்ள பலதரப்பட்ட வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வா்களுடன் பிரதமா் பங்கேற்கும் கூட்டம் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வழக்கமாக நீதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வா்களும் தவறாமல் பங்கேற்பாா்கள். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் 10 மாநில, யூனியன் பிரதேச முதல்வா்கள் பங்கேற்கவில்லை. இந்த முறை பெரும்பாலான முதல்வா்கள் பங்கேற்பாா்கள் என்று தெரிகிறது.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT