இந்தியா

ஆன்லைனில் எதிர்மறை விமர்சனத்தை பதிவிட்டவருக்கு ரூ. 16 லட்சம் அபராதம்!

ஆன்லைனில் எதிர்மறையான விமர்சனத்தை பதிவிட்டவருக்கு ரூ. 16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

சமூக ஊடகத்தில் ஒரு நிறுவனத்தின் பொருள் குறித்து எதிர்மறையான விமர்சனத்தை பதிவிட்டவருக்கு ரூ. 16 லட்சம் அபராதம் விதித்து அபுதாபி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர், தனது நிறுவனத்தின் பொருள் குறித்து இணையத்தில் எதிர்மறையான விமர்சனத்தை குற்றம்சாட்டப்பட்டவர் பதிவிட்டதால் நஷ்டம் ஏற்பட்டதாக முறையிட்டுள்ளார்.

வியாபார நஷ்டம் மற்றும் நீதிமன்ற செலவுகளுக்கு 2,00,000 திர்ஹாம் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரினார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்வைத்தார். மேலும், அவதூறு கூறப்பட்ட காலத்தில் விற்பனையில் சரிவு ஏற்பட்டதா என்பதை சரிபார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், எதிர்மறையான விமர்சனத்தால் பொருளுக்கு நற்பெயர் ஏற்பட்டதாகவும், வியாபார நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஒப்புக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய நிலையில், இழப்பீடாக 70,000 திர்ஹாம் (இந்திய மதிப்பின்படி ரூ. 16 லட்சம்) வழங்க உத்தரவிட்டது.

ஏற்கெனவே, 2024 ஆம் ஆண்டு இதேபோன்ற வழக்கில், எதிர்மறையான விமர்சனத்தை பதிவிட்ட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகள் துபை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT