மழை (கோப்புப்படம்) DIN
இந்தியா

கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு நாளை (மே 27) ரெட் அலர்ட்!

கேரளத்தில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை பற்றி...

DIN

கேரளத்தில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை (மே 27) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரளத்தில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை (மே 27) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இங்கு 200 மி.மீ.-க்கு மேல் மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

அதேபோல மலப்புரம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மே 28 ஆம் தேதி கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும்

மே 29 மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும்

மே 30 எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

புதிய பதவி காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT