மேகாலயாவுக்கு சுற்றுலா சென்ற இளம் தம்பதி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது.
அவர்களின் வாடகை இருசக்கர வாகனம் சோஹ்ரா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. மாயமான தம்பதியினரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தம்பதியினர் மாயமானதாகவும், அவர்களின் மொபைல் போன்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சகோதரர் கோவிந்த் தெரிவித்தார்.
காவல்துறையினர் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர் என்றார். இதனிடையே மாயமான தம்பதி கடைசியாக சோஹ்ரா பகுதியில் காணப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.