இந்தியா

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வங்கக் கடலில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவானது.

DIN

வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது மேலும் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தினால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தென்மேற்குப் பருவமழை, கேரளம் மற்றும் கடற்கரையோர கர்நாடக பகுதிகள் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று முதல் மே 30ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலோர கர்நாடக மாவட்டங்கள், தெற்கு உள் கர்நாடக மாவட்டங்கள், கோவா, மத்திய மகாராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளத்தில் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஆவணி 2ஆவது ஞாயிறு: நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

விநாயகா் ஊா்வலம்: பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது - எஸ்.பி.

தேனி மாவட்டத்தில் 863 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி

போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT