வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!
வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது பற்றி...
தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த பிப். 16 ஆம் தேதி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு பகுதியில் நகர்ந்து அதே பகுதியில் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய பெருங்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Another new low pressure area in the Bay of Bengal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.