முகப்பு
இந்தியா

கேரளத்தில் வலுவடையும் பருவமழை: கோழிக்கோடு, வயநாட்டுக்கு ரெட் அலர்ட்!

கேரளத்தில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 27 மே 2025, 2:54 pm IST
- -
பகிர்:

கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் கோழிக்கோடு மற்றும் வயநாடுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், கோட்டயம், எர்ணகுளம், பத்தினம்திட்டா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை எழுந்துள்ளதால், அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் இடுக்கி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், எல்லையோர தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரிக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.