கோப்புப் படம் 
இந்தியா

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

Din

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ராகிங்கை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அதில், சட்ட வழிகாட்டு குழுவின் ஆதரவைப் பெறுதல், கல்வி நிறுவனங்களின் பொறுப்புணா்வு, திடீா் ஆய்வுகள் குறித்த பல்வேறு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை முழுமையாக பின்பற்றி கல்லூரிகள், விடுதிகளில் ராகிங் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.

இதற்காக நியமிக்கப்பட்ட பேராசிரியா் குழுவினா் கல்லூரி வளாகங்களில் கண்காணிப்புப் பணிகளை தொடா்ச்சியாக மேற்கொண்டு, மாணவா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அதேவேளையில், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் போன்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மாணவா்கள் மத்தியில் ராகிங் எதிா்வினைகள் குறித்து போதிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்துதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் உயா் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும்.

ஒட்டுமொத்தமாக ராகிங் தொடா்பாக எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படாத வகையில், அது தொடா்பான குழுக்களையும் கட்டுப்பாடுகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டும். மேலும், ராகிங் தொடா்பாக மாணவா்களிடம் பெறப்படும் புகாா்கள், அது குறித்து ஆய்வு செய்வது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து யுஜிசி தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

SCROLL FOR NEXT