மேற்கு வங்கத்தில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சுற்றித்திரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தின் பசந்தி பகுதியில் உள்ள பரத்கரில் பிமல் மொண்டல் என அடையாளம் காணப்பட்ட நபர், தனது உறவுக்காரப் பெண்(மைத்துனி) நிதா மொண்டலைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
அந்த நபர், பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையை தூக்கிக்கொண்டு அப்பகுதியில் சுற்றித்திரிவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட நபரும் அந்த பெண்ணும் அப்பகுதியில் உள்ள திடலில் இருந்தபோது சண்டை தொடங்கியிருக்கிறது.
திடீரென்று, குற்றம்சாட்டப்பட்டவர் கத்தியை எடுத்து அந்தப் பெண்ணைத் தாக்கியிருக்கிறார். தாக்குதலின் போது, பெண்ணின் தலையை அவர் துண்டித்தார். பிறகு குற்றம்சாட்டப்பட்டவரே துண்டிக்கப்பட்ட தலையையும் கொல்லப் பயன்படுத்திய ஆயுதத்தையும் பிடித்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
பெண்ணின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரிடமிருந்து ஆயுதமும் கைப்பற்றப்பட்டது என்றார். சொத்து தொடர்பான சில பிரச்னைகளுக்காக குற்றம்சாட்டப்பட்டவருக்கும் அந்த பெண்ணிற்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக சனிக்கிழமை காலை போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.