பாகிஸ்தானுக்கு தெரிவித்த இரங்கல் அறிக்கையை கொலம்பியா திரும்பப் பெற்றது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுக்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானில் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி, அந்நாட்டு கொலம்பியா இரங்கல் தெரிவித்தது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் விளக்கமளிக்க கொலம்பியாவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு சென்றுள்ளது. கொலம்பியா கவுன்சில் உறுப்பினர்களுடன் அவர் பேசுகையில், அகிம்சை மூலம் அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்திய மகாத்மா காந்தியின் நாட்டைச் சேர்ந்தவர்கள். எங்களைப் பொறுத்தவரையில், சுயமரியாதையுடன்கூடிய அமைதிதான் வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. அதனை எதிர்கொள்வதையும் இந்தியா சரியாகச் செய்து வருகிறது.
பிரச்னைகளை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. ஆனால், நெற்றியில் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருக்கும்போது, பேச்சுவார்த்தை நடத்துவதில் நம்பிக்கையில்லை.
பயங்கரவாதத்தை தனது கொள்கையாக பாகிஸ்தானில், அவர்களே பயங்கரவாத முகாம்களை அழிக்கும்போது, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து யோசிக்கலாம்.
ஆனால், அதுவரையில் எந்தப் பேச்சுவார்த்தை கிடையாது. காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், காஷ்மீரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சசி தரூரின் உரையைக் கேட்ட கொலம்பியா, பாகிஸ்தானுக்கு தெரிவித்திருந்த இரங்கல் அறிக்கையையும் திரும்பப் பெற்றது. மேலும், புதிய அறிக்கையையும் கொலம்பியா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.