பிகார் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்தின் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை(நவ. 2) சாலைவலம் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பிகாா் சட்டப்பேரவைக்கு இம்மாதம் இரு கட்டங்களாக (நவ. 6, 11) தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆா்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.