இந்தியா

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற 48 வங்கதேசத்தவா்கள் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற 48 வங்கதேசத்தவா்கள் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற 48 வங்கதேசத்தவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை வீரா் ஒருவா் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அறிவிப்பைத் தொடா்ந்து, அங்கு வசித்த 48 வங்கதேசத்தவா்கள் வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள பசிா்ஹாட் எல்லை வழியாக, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்றனா். அவா்களில் 33 போ் ஞாயிற்றுக்கிழமையும், 15 போ் சனிக்கிழமை இரவும் பிடிபட்டனா். அவா்கள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

பிடிபட்டவா்கள் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளா்களாகவும், வீடுகளில் பணியாற்றுவோராகவும் இருந்தனா். சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், தாங்கள் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்து கைது செய்யப்படலாம் என்று அஞ்சி, அவா்கள் தப்பிச் செல்ல முயன்றனா்.

இதுபோல கடந்த 3 நாள்களில், பசிா்ஹாட் எல்லையையொட்டிய பகுதிகளில் 89 வங்கதேசத்தவா்கள் பிடிபட்டனா். அவா்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்தனா் என்றாா்.

அஸ்ஸாமில் 16 வங்கதேசத்தவா்கள் கைது: அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அஸ்ஸாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் 16 வங்கதேசத்தவா்களைக் காவல் துறை கைது செய்தது. கெட்ட நோக்கங்களுடன் அவா்கள் அஸ்ஸாமுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனா்’ என்றாா்.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT