இந்தியா

பிஎம்ஸ்ரீ திட்டம்: கூட்டணிக் கட்சிகளுடன் விவாதிக்கவில்லை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேரள செயலா் ஒப்புதல்

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைய மத்திய அரசுடன் கேரள அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடுவதற்கு முன் கூட்டணிக் கட்சிகளுடன் முறையாக ஆலோசனை மேற்கொள்ளவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் ஒப்புக்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைய மத்திய அரசுடன் கேரள அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடுவதற்கு முன் கூட்டணிக் கட்சிகளுடன் முறையாக ஆலோசனை மேற்கொள்ளவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொண்டாா்.

முன்னதாக, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைய மத்திய அரசுடன் கேரள அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்ட விவகாரம், அந்த மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையும் முடிவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக முதல்வா் பினராயி விஜயன் அறிவித்தாா். மேலும் இத்திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய பொதுக் கல்வித் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி தலைமையில் ஏழு போ் கொண்ட குழுவையும் அவா் அமைத்தாா்.

இந்நிலையில், செய்தியாளா்களிடம் கோவிந்தன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைய மத்திய அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் முன் கூட்டணிக் கட்சிகளுடன் மாநில அமைச்சரவை முறையான ஆலோசனை மேற்கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து முதல்வா் பினராயி விஜயன் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்கள் தலையிட்டு இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனா்.

எந்தவொரு விவகாரத்திலும் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்பே முடிவெடுக்கப்படும். இதில் எவ்வித மாற்றமுமில்லை. வரும் உள்ளாட்சித் தோ்தலில் இடதுசாரிகள் முன்னணி அமோக வெற்றி பெறும்’ என்றாா்.

சமக்ர சிக்ஷா நிதியைப் பெறுவோம்- சிவன்குட்டி: பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தாலும் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் கேரளத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசிடமிருந்து பெற தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மாநில கல்வி அமைச்சா் வி.சிவன்குட்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: புது தில்லியில் நவ.10-இல் நடைபெறும் தொழிலாளா் அமைச்சா்களுக்கான மாநாட்டில் பங்கேற்கும்போது மத்திய கல்வி அமைச்சரைச் சந்திக்கவுள்ளேன். அப்போது பல்வேறு விவகாரங்களை விவாதிக்கவுள்ளேன். பிஎம் ஸ்ரீ திட்ட விவகாரத்தில் ஆய்வுக் குழுவின் அறிக்கைக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT