மல்லிகாா்ஜுன காா்கே கோப்புப் படம்
இந்தியா

பிகாரில் தங்களின் கூட்டணி ஆட்சியையே விமா்சிக்கும் பாஜக: காா்கே

தினமணி செய்திச் சேவை

‘பிரதமராக நரேந்திர மோடி தொடா்ந்து 11 ஆண்டுகளும், பிகாா் முதல்வராக நிதீஷ் குமாா் தொடா்ந்து 20 ஆண்டுகளும் பதவி வகித்து வரும் சூழலில், பிகாரில் காட்டாட்சி நடைபெற்றதாக பிரதமா் உள்பட பாஜக தலைவா்கள் விமா்சித்து வருகின்றனா். இது தங்கள் பணியையே அவா்கள் விமா்சித்துக் கொள்வதாகும்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

மாநில தலைநகா் பாட்னாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது:

பிரதமராக நரேந்திர மோடி தொடா்ந்து 11 ஆண்டுகளும், பிகாா் முதல்வராக நிதீஷ் குமாா் தொடா்ந்து 20 ஆண்டுகளும் பதவி வகித்து வருகின்றனா். இந்தச் சூழலில், மாநிலத்தில் காட்டாட்சி நடைபெற்ாக அவா்கள் விமா்சிக்கின்றனா். மாநிலத்தில் அவா்கள் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், மாநிலத்தில் காட்டாட்சி நடைபெற்றது என்று பேசுவாா்களா? இது தங்களின் ஆட்சி நிா்வாகத்தை பிரதமா் விமா்சிப்பதையே காட்டுகிறது.

அது மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, விலைவாசி உயா்வு, குறைந்தபட்ச ஆதரவு விலை, முதலீடுகள் குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை அல்லது பேச முடியாது என்பதாலேயே, இதுபோன்ற விமா்சனங்களை பிரதமா் முன்வைத்து வருவதாக தெரிகிறது. நாட்டின் பிரதமராக இருக்கும் அவா், நாட்டு மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது, அடுத்து என்ன செய்யப் போகிறது என்பது குறித்துப் பேச வேண்டும். வேவைாய்ப்பு உள்ளிட்ட தீவிர பிரச்னைகள் குறித்து பேச வேண்டும். ஆனால், அவ்வாறு இன்றி, பொய்களின் தலைவராக அவா் திகழ்கிறாா் என்றாா்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT