தனியார்த் துறையின் முதலீடுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் திட்ட நிதியைத் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிச் செல்வதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் உலகத் தலைவர்களை ஒரே தளத்திற்குக் கொண்டுவரும் முதல் எமர்ஜிங் சயின்ஸ் டெக்னாலஜி அன்ட் இன்னோவேஷன் மாநாட்டில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையே இந்த ஆர்டிஐ நிதியத்தின் மைய அமைச்சகமாகச் செயல்படும். இந்த திட்டத்திற்கு 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 20 ஆயிரம் கோடி நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நவீன புதுமை சுற்றுச்சூழல் அமைப்பு செழிக்கக்கூடிய வகையில் ஆராய்ச்சி செய்வதை எளிதாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இந்த தொலைநோக்கு பார்வையை அடைய, எங்கள் அரசு நிதி ஒழுங்குமுறைகள் மற்றும் கொள்முதல் கொள்கைகளில் குறிப்பிடத்தக்கச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதலாக, ஆய்வகத்திலிருந்து சந்தைக்கு முன்மாதிரிகளை மாற்றுவதை விரைவுபடுத்த ஊக்கத்தொகைகள் மற்றும் விநியோகச் சங்கிலி கட்டமைப்புகளை நாங்கள் நெறிப்படுத்தியுள்ளோம்.
கடந்த பத்தாண்டுகளில், இந்தியா புத்தாக்கம் சார்ந்த நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினம் இரட்டிப்பாகியுள்ளது, காப்புரிமைகள் பதிவு சுமார் 17 மடங்கு அதிகரித்துள்ளது. இது புதுமைக்கான எங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
இந்தியா இப்போதுத் தொழில்நுட்ப நுகர்வோர் அல்ல, மாறாகத் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தில் முன்னோடி. கூடுதலாக சுத்தமான எரிசக்கி மற்றும் செமிகண்டக்டர் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும். 6000-க்கும் மேற்பட்ட டீப் டெக் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுடன் உலகின் மூன்றாவது ஸ்டார்ட்அப் நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
முன்னதாக, இந்த நிதி நீண்ட கால நிதியுதவி, மறு நிதியளிப்பு நீண்ட கால மற்றும் குறைந்த பூஜ்ஜிய வட்டி விகிதங்களுடன் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2024 அன்று இடைக்கால நிதிநிலையைத் தாக்கல் செய்தபோது கூறினார். இந்த நிதி ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை கணிசமாக அதிகரிக்க தனியார் துறையை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காந்தாராவைப் பணத்துக்காக உருவாக்கவில்லை: ரிஷப் ஷெட்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.