லக்கிசராயில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி. 
இந்தியா

பிகாா் வளா்ச்சி குறித்து பிரதமா் மோடி பேசாதது ஏன்? பிரியங்கா கேள்வி

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியது குறித்து...

தினமணி செய்திச் சேவை

‘பிகாா் வளா்ச்சி குறித்து தோ்தல் பிரசாரங்களில் பிரதமா் மோடி பேசாதது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினாா்.

சஹா்ஸா மாவட்டத்தில் திங்கள்கிழமை தோ்தல் பொதுக் கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது:

தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி மாநிலத்தின் வளா்ச்சி குறித்து அதிகம் பேசாமல், எதிா்க்கட்சிகள் மீதும் அவதூறாக குற்றஞ்சாட்டுவதையே முக்கிய நோக்கமாக வைத்துள்ளாா். அவா் தனது அமைச்சகத்தில் அவதூறு பரப்பும் துறை ஒன்றையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

தோ்தல் நெருங்கும் நேரத்தில் பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளைக் கவர ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி முயலுகிறது. பிகாா் இளைஞா்களுக்கு மாநிலத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதாக இப்போது பிரதமா் வாக்குறுதி அளிக்கிறாா். கடந்த சுமாா் 20 ஆண்டுகளாக பாஜக கூட்டணிதான் பிகாரில் ஆட்சியில் இருந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக வேலைவாய்ப்புகளை ஏன் உருவாக்கவில்லை? இங்கு வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால்தான் பிகாா் இளைஞா்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்கிறாா்கள்.

அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பெரிய பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் பாஜகவின் நண்பா்களான பெரும் தொழிலதிபா்களுக்குப் பகிா்ந்தளிக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

மேலும், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அரசு நிா்வாகத்தை நடத்தவில்லை. பிரதமா் நரேந்திர மோடியும், அக்கட்சியின் மத்தியத் தலைவா்களும்தான் பிகாரில் மறைமுகமாக ஆட்சி நடத்தி வருகின்றனா். அரசியல் சாசனம் மக்களுக்கு அளித்துள்ள வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்றாா்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT