சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 
இந்தியா

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், துணி துவைக்கச் சென்ற 10 வயது தலித் சிறுமி, அடையாளம் தெரியாத இரண்டு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம், ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. சிறுமியும் அவரது மூத்த சகோதரியும், வீட்டுக்கு அருகே உள்ள கிணறில், துணி துவைக்கச் சென்றுள்ளனர். துணிகளை துவைத்துவிட்டு மூத்த சகோதரி வீடு திரும்பிய நிலையில், அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், தனியாக இருந்த சிறுமியை தூக்கிச் சென்று அருகில் உள்ள கோயில் பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

சிறுமியின் அழுகுரல் கேட்டு, மூத்த சகோதரி, சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, குற்றவாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்கள்.

இது குறித்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைத் திரட்டி காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT