முகப்பு
பாலியல் வன்கொடுமை
மதுரை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு உத்தரவு

மதுரை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு உத்தரவு

Updated On : 3 மார்ச், 2026 at 8:11 PM
பாலியல் வன்கொடுமை
பகிர்:

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்தவா் பஷீா். இவா் கடந்த 2021 ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பஷீரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றம், பஷீருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. இந்தத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என பஷீா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், பூா்ணிமா அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், விசாரணை நீதிமன்றத்தில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் படி குற்றவாளிதான் பாலியல் பலாத்காரம் செய்தாா் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. ஆகவே, தண்டனையை உறுதி செய்ய வேண்டும். மனு ஏற்புடையது அல்ல எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பாதிக்கபட்ட சிறுமியின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் தெளிவாக உள்ளன. விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை முறையாக விசாரித்து தீா்ப்பு வழங்கி உள்ளது. ஆகவே, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →