பிகார் சட்டப்பேரவை முதல் கட்டத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நாளை மறுநாள் (நவ. 6) நடைபெறுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டீரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான இந்தியா (மகாகத்பந்தன்) கூட்டணியும் மோதுகின்றன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தாலும், தே.ஜ. மற்றும் இந்தியா கூட்டணிக்கு இடையிலேயே இருமுனைப் போட்டி நிலவுகிறது.
இரண்டு கூட்டணியிலும் தொகுதிப் பங்கீட்டில் சலசலப்பு ஏற்பட்டாலும், இறுதியில் சமரசம் ஏற்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, தங்கள் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கடந்த சில நாள்களாக பிகாரில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவுபெறவுள்ளது. இறுதி கட்டப் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே, வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இந்திய தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரங்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.