முன்னாள் மத்திய அமைச்சரும் நான்கு முறை பாஜக எம்பியுமான ராஜேன் கோஹைன் பிராந்திய அரசியல் அமைப்பான அஸ்ஸாம் ஜெய்த்ய பரிஷத் கட்சியில்(ஏஜேபி) இணைந்தார்.
அக்டோபர் 9 ஆம் தேதி பாஜகவிலிருந்து ராஜிநாமா செய்த கோஹைன், ஏஜேபி தலைவர் லுரின்ஜோதி கோஹைன் மற்றும் பொதுச் செயலாளர் ஜெகதீஷ் புயான் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிராந்தியக் கட்சியில் இணைந்தார்.
1999 முதல் 2019 வரை நான்கு முறை நாகான் நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், 2016 முதல் 2019 வரை மத்திய ரயில்வே இணை அமைச்சராகப் பணியாற்றினார்.
74 வயதான கோஹைன், பாஜக அஸ்ஸாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாலும், வெளிமாநிலத்தவர் குடியேற அனுமதிப்பதன் மூலம் பழங்குடி சமூகங்களுக்குத் துரோகம் இழைத்ததாலும் அக்கட்சியிலிருந்து விலகுவதாகக் கூறினார்.
மேலும் பாஜகவின் மாநிலத் தலைமை வகுப்புவாத அரசியலை ஊக்குவிப்பதாகவும், பல நூற்றாண்டுகள் பழமையான அஸ்ஸாமிய சமூகத்தைப் பிளவுபடுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.