இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள அமெரிக்கா தீவிர விவாதங்களை நடத்தி வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பேசுகையில், ``பிரதமர் மோடி மீது அதிபர் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்கள் அடிக்கடி பேசுகிறார்கள்.
அதிபரும் அவரின் வர்த்தகக் குழுவும் இந்தியாவுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த தீவிரமான விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இரு நாடுகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேறி வருகிறது.
சமீபத்தில் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போதும், ஓவல் அலுவலகத்திலிருந்து பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேசினார். அப்போது, அவருடன் மூத்த இந்திய - அமெரிக்க அதிகாரிகளும் உடனிருந்தனர். அதிபர் டிரம்ப், இந்திய - அமெரிக்க உறவில் உறுதியாக உள்ளார்’’ என்று தெரிவித்தார்.
ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார பேச்சுவார்த்தையை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இருப்பினும், இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க விரும்புவதாக டிரம்ப் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.
இதையும் படிக்க: நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.