தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் கிரெடிட் கார்டு புள்ளிகளின் மூலமாக மோசடிக்கு ஆளாகி ரூ. 11.95 லட்சம் இழந்துள்ளார்.
தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு போன் அழைப்பு வந்துள்ளது. பிரபல நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ள மோசடி கும்பல், அந்த பெண்ணின் கிரெடிட் கார்டு போனஸ் பாயிண்ட்ஸை பயன்படுத்த உதவுவதாகக் கூறியுள்ளனர்.
இதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபியைக் கேட்டுள்ளனர். அந்த பெண்ணும் அவர்களை நம்பி ஓடிபியைக் கூற சில நிமிடங்களில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 11.95 லட்சம் டெபிட் ஆகியுள்ளது. அந்த பணம் பல வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
உடனடியாக அவர் புகார் அளித்ததன்பேரில், போலீசார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தனர். மேலும் அவருக்கு அழைப்பு வந்த மொபைல் எண்களின் அடிப்படையிலும் சந்தேகத்திற்குரிய நபர்கள் இருக்கும் இடத்திலும் ஆய்வு செய்த நிலையில் இதற்கு மூளையாகச் செயல்பட்டவர் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மோசடி பணத்தை வைத்திருக்கும் கணக்குகள் முடக்கப்பட்டன.
வங்கி அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து பாதிக்கப்படுபவர்களிடமிருந்து ஓடிபிகளைப் பெற்று இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதற்கான தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு அல்லது அதில் தேர்ந்தவர்களையும் இதில் ஈடுபடுத்துகின்றனர்.
இதுபோன்ற மோசடிகளில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.