கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படும் எனும் கருத்தை துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மீண்டும் மறுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்வர் சித்தாரமையா தலைமையிலான அமைச்சரவையில், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகப் பதவி வகிக்கின்றார்.
இதில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி துவங்கி இம்மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவி உயர்த்தப்படுவார் எனவும், இந்த மாற்றத்தை நவம்பர் புரட்சி எனவும் அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவி வருகின்றது.
இந்தக் கருத்தை, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நவம்பர் புரட்சி எல்லாம் இருக்காது எனக் கூறி முதல்வர் பதவியில் மாற்றமில்லை என்பதை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“நவம்பர் புரட்சியோ, டிசம்பர் புரட்சியோ அல்லது ஜனவரி, பிப்ரவரி புரட்சியெல்லாம் இருக்காது. எந்தவொரு புரட்சியாக இருந்தாலும் 2028 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது மட்டுமே நடைபெறும்
யாரோ ஒருவர் எந்தவொரு காரணமும் இல்லாமல் இதை எழுதியுள்ளார். கட்சி எங்களுக்கு, பிகார் தேர்தல் உள்பட பல முக்கிய பொறுப்புகளைக் கொடுத்துள்ளது.
நாங்கள் கட்சியின் அறிவுறுத்தல்களை மட்டுமே பின்பற்றுவோம். அவர்தான் (சித்தராமையா) முதல்வர் என்றால், 5 ஆண்டுகளுக்கும் அவரே முதல்வராகத் தொடர்வார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிகாரில் முதல்கட்ட வாக்குப் பதிவு நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.