தேசிய ஜனநாயகக் கூட்டணி சின்னங்கள் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் காட்டாட்சி திரும்பும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார்.
பிகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு நவ. 6ல் நிறைவடைந்த நிலையில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி ஜமுய் பகுதியில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
மக்களாகிய நீங்கள் தவறு செய்து தாமரை, அம்பு சின்னத்திலிருந்து சிறிது விலகிச் சென்றாலும் மீண்டும் காட்டாட்சி திரும்பும்.
இந்தியாவை நக்சல் இல்லாத மாநிலமாக மாற்றப் பிரதமர் மோடியின் முயற்சிகளை எடுத்துரைத்த அவர், முன்னர் நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இருந்த ஜமுய் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வாக்குப்பதிவு தற்போது அமைதியாக நடத்தப்படுகிறது. பல்வேறு பிரச்னைகளால் 3 மணியுடன் நிறைவடையும் வாக்குப்பதிவு, தற்போது 5 மணி வரை தொடர்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி பிகாரில் சாலைகள், பாலங்கள், எத்தனால் தொழிற்சாலைகள் மற்றும் சர்க்கரை தொழிற்சாலைகள் போன்ற உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகள் முழுமையாக வளர்ந்த மாநிலத்தில் கவனம் செலுத்தும். மாநிலத்தில் மீண்டும் காட்டாட்சியை வர விடமாட்டோம் என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை முதல் கட்டத் தேர்தல்களில் துடைத்தெறியப்பட்டுவிட்டன, ஜமுயிலும் அதுவே நடக்க வேண்டும். என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றால் பிகார் வெள்ளத்திலிருந்து விடுபடுவதை உறுதி செய்வதற்காக ஒரு புதிய துறையை அமைப்போம். ஆனால் லாலுவின் மகன் வெற்றி பெற்றால் கடத்தல் என்ற புதிய துறையை மட்டுமே தொடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிக்க: வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் இரு காற்றழுத்தத் தாழ்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.