இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளைக் கொண்டுவரும் புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடலோரப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பானது, இந்தியாவின் பரந்த கடல் வளங்களை நிலையான முறையில் கையாளப்படும் நோக்கில் 2025 - 26 பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பைச் செயல்படுத்துவதாகத் தெரிவிக்கிறது.
மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தச் சீர்திருத்தமானது ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களுக்கான உரிமம் மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளை நெறிப்படுத்தவும், நவீன மீன்பிடித் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதை ஊக்குவிக்கவும் செய்கிறது.
மேலும், கடலில் பெறப்படுபவையை நேரடியாகச் சந்தைப்படுத்துவதில் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் பங்கையும் இந்தச் சீர்திருத்தம் வலியுறுத்துகிறது. இதனால், வணிக இடைத்தரகர்களைச் சார்ந்திருத்தல் குறையும்.
நாட்டில் 20.2 லட்சம் சதுர கிலோமீட்டர் சிறப்பு பொருளாதார மண்டலம் இருந்தபோதிலும், இந்த நடவடிக்கையால் இந்தியாவின் ஆழ்கடல் மீன்பிடி திறன் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வள மேலாண்மையை நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைப்பதன் மூலம், பொருளாதார வாய்ப்பை பாதுகாப்புத் தேவைகளுடன் சமநிலைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு அரசு முயற்சிக்கிறது.
இந்த புதிய சீர்திருத்தத்தால் வேலைவாய்ப்புகள் கிடைக்கும், மீன் ஏற்றுமதி அதிகரிக்கும், பல மாநிலங்களில் கடலோர மீன்வளத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: மோடியுடன் கலந்துரையாடல்! பங்கேற்றால் 50 மதிப்பெண்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.