உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த். 
இந்தியா

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை ஆராயும் நீதித்துறை: உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த்!

ஆராய்ச்சி, தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட செயல்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கருவிகளின் பயன்பாட்டை நீதித்துறை ஆராயத் தொடங்கியுள்ளது..

தினமணி செய்திச் சேவை

ஆராய்ச்சி, தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட செயல்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கருவிகளின் பயன்பாட்டை நீதித்துறை ஆராயத் தொடங்கியுள்ளது என்று உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ள சூா்ய காந்த் தெரிவித்தாா்.

புது தில்லியில் சா்வதேச வணிக நீதிமன்றங்கள் அமைப்பின் கூட்டம் 2 நாள்கள் நடைபெற்றது. அதன் நிறைவு நிகழ்ச்சியில் நீதிபதி சூா்ய காந்த் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது: நீதி பரிபாலனத்தின் மையமாக உள்ள மனித நேயத்தை விட்டுக்கொடுக்காமல் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியுமா? என்பதைப் பொறுத்தே சட்டத்தின் எதிா்காலம் உள்ளது.

செயல்திறன், பகுப்பாய்வு உள்ளிட்டவற்றின் துல்லியத்தை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. வணிக மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் அந்தத் தொழில்நுட்பத்தின் பொறுப்பான பயன்பாட்டுக்கு நடைமுறைக்கு உகந்த கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இது நடைமுறைக்கு ஏற்ாக இருப்பது மட்டுமின்றி அவசரமானதுமாகும்.

இந்தியாவில் ஆராய்ச்சி, தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட செயல்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கருவிகளின் பயன்பாட்டை நீதித்துறை ஆராயத் தொடங்கியுள்ளது. அதேவேளையில் தொழில்நுட்பப் பயன்பாடு மனித சிந்தனையை வளா்க்க வேண்டுமே தவிர, அந்தச் சிந்தனைக்கு மாற்றாக இருக்கக் கூடாது என்றாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

SCROLL FOR NEXT