8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி
8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்' என்ற பதிவுக்காக மன்னிப்பு என்சிஇஆா்டி கோரியது குறித்து...
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில், தவறுக்காக என்சிஇஆா்டி வருந்தி மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் புதன்கிழமை கடும் ஆட்சேபம் தெரிவித்தாா்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு புதன்கிழமை கடும் ஆட்சேபம் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இந்த விவகாரத்தை இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளேன். நீதித் துறை மற்றும் அதன் நோ்மையை அவமதிக்க உலகில் யாரையும் அனுமதிக்க மாட்டேன். என்ன விலை கொடுத்தேனும் தடுப்பேன். சட்டம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இந்த விவகாரத்தை எப்படி கையாள வேண்டுமென எனக்குத் தெரியும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது. வழக்கை தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான மேற்கண்ட அமா்வு விசாரிக்கவுள்ளது.
மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி
இந்த நிலையில், 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில், தவறுக்காக என்சிஇஆா்டி வருந்தி மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்சிஇஆா்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலைப் பெற்றபோது, அதில் 'சமுதாயத்தில் நீதித் துறையின் பங்கு' என்ற தலைப்பு கொண்ட பாடப் பிரிவில் சில தகாத உரை இருப்பது கண்டறியப்பட்டது. இதே கருத்தை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்தது. பின்னா், அந்த நூலின் விநியோகத்தை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று அந்தத் துறை உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு இணங்கி, அந்த நூலின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
நீதித் துறை மீது என்சிஇஆா்டி மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை நிலைநாட்டி, அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் நீதித் துறை திகழ்கிறது என்றே என்சிஇஆா்டி கருதுகிறது. நூலில் சில தகாத கருத்துகள் இடம்பெற்றது உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்படவில்லை. முற்றிலும் தற்செயலானதாகும்.
அந்தப் பாடப் பிரிவு உரிய ஆலோசனைகளுடன் மாற்றியமைக்கப்பட்டு மாணவா்களுக்கு புதிய நூல் வழங்கப்படும். இந்தத் தவறுக்காக என்சிஇஆா்டி வருந்தி மன்னிப்பு கோருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடப்புத்தகங்களின் நோக்கம் மாணவர்களிடையே அரசியலமைப்பு கல்வியறிவு, நீதித் துறை மதிப்பு மற்றும் ஜனநாயக பங்கேற்பு குறித்த தகவலறிந்த புரிதலை வலுப்படுத்துவதாகும்.
"எந்தவொரு அரசியலமைப்பு அமைப்பின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கவோ அல்லது குறைக்கவோ எந்த நோக்கமும் இல்லை. அதன் தொடர்ச்சியான மறுஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, என்சிஇஆா்டி ஆக்கபூர்வமான கருத்துகளுக்காக காத்திருக்கிறது.
மேலும், 2026-27 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டு புதிய நூல் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலைதளத்தில் இருந்து வாபஸ்.... பாடப்புத்தக விநியோகம் நிறுத்தி வைப்பு
உச்சநீதிமன்றத்தின் கடும் ஆட்சேபத்தைத் தொடா்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, என்சிஇஆா்டி வலைதளத்தில் இருந்து புதிய சமூக அறிவியல் பாடப் புத்தகம் திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன் பாடப்புத்தகத்தின் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பாடப் பிரிவை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னாட்சி அமைப்பான என்சிஇஆா்டி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் பிற மாநில கல்வி வாரியங்களுக்கு பாடத்திட்ட வழிகாட்டுதல்களை வழங்கும் முதன்மை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
The NCERT on Wednesday apologised for "inappropriate content" after facing the Supreme Court's ire over a chapter talking about judicial corruption in a Class 8 textbook and said the book concerned will be rewritten in consultation with appropriate authorities.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.