ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
திருமலை திருப்பதிக்கு வருகை தந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று பின்னர் தரிசனத்திற்காக அழைத்துச் சென்றனர்.
"இன்று அதிகாலை சுப்ரபாத சேவையின் போது முகேஷ் அம்பானி வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்காக அழைத்துச் சென்றனர்," என்று அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் கூறினார்.
தரிசனத்திற்குப் பிறகு, அர்ச்சகர்கள் அவருக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கி கௌரவித்தனர்.
மேலும் ரங்கநாயக்குலா மண்டபத்தில் இறைவனின் பிரசாதங்களையும் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.