பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு இளம்பெண் உயிரிழந்தார்.
பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. அக்டோபர் 26 முதல் டெங்கு பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக மாகாண சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி,
சிந்து மாகாணத்தின் கோரங்கியில் வசித்துவந்த 19 வயது இளம்பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதித்து ஒரு நாளுக்குப் பிறகு இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, கண் வலி, வலிப்பு, தசை பலவீனம் உள்ளிட்டவை டெங்கு மூளைக்காய்ச்சலின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றது.
கராச்சி போன்ற இடங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கராச்சியில் 269 பேர், ஹைதராபாத்தில் 458 பேர் உள்பட டெங்கு காய்ச்சலுக்கு மொத்த 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
271 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 171 பேர் தனியார் சுகாதார மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தாண்டு மட்டும் மொத்தம் 12,284 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் மருத்துவ சங்கம், சிந்து மாகாணத்தின் கராச்சி மற்றும் ஹைதராபாத் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார அவசர நிலையை அறிவித்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: நாளை முதல் 3 நாள்களுக்கு கனமழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.