தில்லி கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நாளை(நவ. 12) மாலை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி செங்கோட்டை அருகே நேற்று (நவ.10) மாலை சாலையில் நின்றுகொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், முகமது உமர் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் ஒரு டெட்டனேட்டரை வைத்து காரை வெடிக்கச் செய்தது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக நாளை(நவ. 12) மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார் வெடிப்பு சம்பவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றுள்ளார். நாளை மாலை அவர் தில்லி திரும்பியவுடன் தில்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்த இந்த கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.