பூடானில் பிரதமர் மோடி  
இந்தியா

பூடான் மன்னருடன் அற்புத சந்திப்பு: பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடி பூடான் விழாவில் பங்கேற்றது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

பூடான் மன்னருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது என்று பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவில் பதிவிடடுள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பூட்டானுக்குச் சென்றுள்ள பிரதமா் மோடி, தலைநகா் திம்புவில் அந்நாட்டின் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியால் வாங்சுக்கை சந்தித்துப் பேசினார். அப்போது, அந்நாட்டுக்கு ரூ.4,000 கோடி கடனுதவி இந்தியா அறிவித்து. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம்-மருந்துகள், மனநல மருத்துவத் துறைகளில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

பூடானில் நடைபெற்று வரும் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவில் காலசக்கரம் அதிகாரமளிப்பு விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில்,

பூடான் மன்னருடன் காலசக்கரம் அதிகாரமளிப்பு விழாவை தொடங்கிவைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. இது உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான சடங்கு எனக் குறிப்பிட்டுள்ளார்.

காலசக்ரா அதிகாரமளிப்பு என்பது பௌத்தர்களையும் புத்த மத அறிஞர்களையும் ஒன்றிணைத்த உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பூட்டானின் முன்னாள் மன்னர் ஜிக்மே நாம்கியேல் வாங்சுக்குடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு நல்லுறவின் அனைத்து பரிமாணங்கள் குறித்தும் விவாதித்தோம். பூடானின் வளர்ச்சி பயணத்தில் முக்கியக் கூட்டாளியாக இருப்பது இந்தியாவுக்குப் பெருமை என்று தெரிவித்துள்ளார்.

மோடியை சாதனை பெற்ற ஆன்மிக குரு என்றழைத்த பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், பூடானில் நடந்துவரும் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவின் ஒரு பகுதியாக இன்று தொடங்கிய புனிதமான காலசக்கரம் அதிகாரமளிப்வு விழாவை பிரதமர் திறந்துவைத்து ஆசிர்வதித்தாக அவர் கூறினார்.

Prime Minister Narendra Modi on Wednesday inaugurated the Kalachakra Empowerment' ceremony at the ongoing Global Peace Prayer Festival in Bhutan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் ரூ.8.57 கோடி!

2026 தேர்தலில் ஸ்டாலின்தான் முதல்வர்; பாஜக எதிரணி! - அப்பாவு | செய்திகள்: சில வரிகளில் | 12.11.25

பிகார் தேர்தல் : என்டிஏ கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் - கருத்துக் கணிப்பு முடிவுகள்!

நெதன்யாகுவுக்கு மன்னிப்பு கோரி இஸ்ரேல் அதிபருக்கு டிரம்ப் கடிதம்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் குறைந்து ரூ.88.66 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT