இந்திய ராணுவத்துக்கு பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளை கொள்முதல் செய்வதற்காக பொதுத் துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,095 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கையொப்பமிட்டது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இன்வாா் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளை கொள்முதல் செய்ய பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,095.70 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
லேசா் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ஆயுத அமைப்பு இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறனுடையது’ எனத் தெரிவிக்கப்பட்டது.