தில்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணமாகவே ரயில் நிலைய சேவை நிறுத்திவைக்கப்படுவதாகவும், தில்லியிலுள்ள மற்ற மெட்ரோ ரயில் நிலையங்கள் வழக்கம்போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாதுகாப்பு காரணங்களுக்காக தில்லி லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் மறுஅறிவிப்பு வரும் வரை செயல்படாது. ஆனால், மற்ற மெட்ரோ நிலையங்கள் வழக்கம்போல செயல்படும். மேற்கொண்டு தகவல்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே திங்கள்கிழமை மாலை 6.50 மணியளவில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ள புலனாய்வு அமைப்புகள், இது பயங்கரவாதத் தாக்குதல் எனத் தெரிவித்துள்ளன. மத்திய அமைச்சரவையும் பயங்கரவாதத் தாக்குதல் என அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.