தில்லி செங்கோட்டை அருகே, கார் குண்டு வெடித்ததில் பலர் பலியான சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி என கருதப்படும் மருத்துவர் உமர் உன் நபி என்பவரின் விடியோ வெளியாகியிருக்கிறது.
தில்லி செங்கோட்டை அருகே, மசூதிக்கு பக்கத்தில், அவர் சாலையில் நடந்து செல்லும் விடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் நவ. 10ஆம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்தி வரும் விசாரணைக்கு, இந்த விடியோ மிக முக்கிய ஆதாரமாக மாறியிருக்கிறது.
தற்போது, குற்றவாளிகளுக்கு உதவியவர்கள், உணவளித்தவர்கள், பேட்டரி வாங்கிக் கொடுத்தவர்கள், வாகனம் வாங்கியவர்கள், தங்குவதற்கு இடமளித்தவர்கள், இவர்களுக்கு உதவியாக பல்கலைக்கழக ஊழியர்கள் யாரேனும் இருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு அதிகாரிகள், இது தொடர்பாக பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து நடத்தி வரும் விசாரணையில், ஃபரிதாபாத்திலிருந்து தில்லி வரை காரை ஓட்டி வந்த உமர் பதிவாகியிருக்கும் சிசிடிவி காட்சிகளை பல்வேறு சுங்கச் சாவடிகளிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளையில், உமர் வாங்கியிருந்த மற்றொரு சிவப்பு நிறக் காரும் ஹரியாணா மாநில ஃபரிதாபாத்தின் கந்தாவ்லி கிராமத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
உடனடியாக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, காருக்குள் வெடிபொருள்கள் ஏதேனும் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், காரில் எந்த பொருளும் இல்லை. ஆனால், இதுவும் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தவே வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஃபரிதாபாத் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் முஸாமில் அக்.30ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அன்றுதான் உமர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியிருக்கிறார். மீண்டும் அவர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இந்த 10 நாள்களும் அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க... தில்லி கார் குண்டு வெடிப்பு! உமர் டைரி சிக்கியது; மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருக்கும் ஒரு வார்த்தை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.