கனடாவின் நயாக்ரா பிராந்தியத்தில் அந் நாட்டு வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்தை புதன்கிழமை சந்தித்து ஆலோசனை மற்கொண்ட மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். 
இந்தியா

கனடா வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

தினமணி செய்திச் சேவை

கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்தை மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

ஜி7 கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்நிலையில், கனடாவின் நயாக்ரா பிராந்தியத்தில் ஜி7 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சா் ஜெய்சங்கா் சென்றாா். கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த் அழைப்பின்பேரில், இந்தக் கூட்டத்தில் ஜெய்சங்கா் பங்கேற்றாா்.

அங்கு அனிதா ஆனந்தை ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜி7 வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தை நடத்தியதற்காக அனிதா ஆனந்தை பாராட்டினேன். 2025-ஆம் ஆண்டுக்கான புதிய செயல்திட்டத்தை அமல்படுத்தியதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கும் அவரைப் பாராட்டினேன். இந்தியா-கனடா இருதரப்பு கூட்டுறவை மீண்டும் கட்டியெழுப்புவதில் மிகுந்த ஆவலாக உள்ளேன்’ என்றாா்.

மெக்ஸிகோ அமைச்சருடன் சந்திப்பு: மெக்ஸிகோ வெளியுறவு அமைச்சா் ஜுவான் ரமோன் டெ லா ஃபுவந்தேவையும் ஜெய்சங்கா் சந்தித்தாா். வணிகம், வா்த்தகம், மருத்துவம் மற்றும் மருந்து பொருள்கள் உற்பத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா-மெக்ஸிகோ இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து அமைச்சா் ஜுவானுடன் பேசியதாக ‘எக்ஸ்’ தளத்தில் ஜெய்சங்கா் பதிவிட்டாா். தென் ஆப்பிரிக்க பிரதமா் ரொனால்ட் லமோலாவையும் ஜெய்சங்கா் சந்தித்து கலந்துரையாடினாா்.

தில்லி கார் குண்டுவெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ மறுஅறிவிப்பு வரை மூடல்!

அமெரிக்க அரசின் முடக்கம் முடிவு! நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்து!

சென்னையில் பரவலாக மழை!

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

SCROLL FOR NEXT