பிகாரில் வாக்குரிமை பயணப் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி.  
இந்தியா

பிகாரில் ராகுல் பிரசாரம் செய்த தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் பின்னடைவு

பிகாரில் ராகுல், வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்ட தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் பின்னடைவு.

இணையதளச் செய்திப் பிரிவு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஆகஸ்ட் மாதம் வாக்குத் திருட்டைக் கையிலெடுத்து, பிகாரில் வாக்காளர் அதிகார பயணம் மேற்கொண்ட பகுதிகளில் உள்ள தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு மாநிலங்களிலும் மத்தியில் ஆளும் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி வெளிப்படுத்தியிருந்தார்.

இதன் அடிப்படையில், பிகார் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்டப் பகுதிகளில் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரையை மேற்கொண்டிருந்தார். அதாவது பிகாரின் சசராமில் தொடங்கி 25 மாவட்டங்கள், 110 பேரவைத் தொகுதிகள் வழியாக 1300 கிலோ மீட்டர் பயணித்து பாட்னாவில் நிறைவு செய்தார்.

ஆனால், தற்போது, ராகுல் பயணித்த இந்த தொகுதிகளில் ஒன்றில் கூட, காங்கிரஸ் முன்னிலை வகிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலை 4 மணி நிலவரப்படி 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கிஷண்கஞ்ச், மணிஹாரி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

பிகாரில் பலிக்கவில்லையா ராகுல் மேஜிக்?

ராகுல் காந்தியின் மேஜிக் பிகார் பேரவைத் தேர்தலில் பலிக்கவில்லை என்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதில்லாமல், பிகாரின் கங்கை சமவெளியில், ராகுலின் புகழ் மங்கி வருவதாகவே பார்க்கப்படுகிறது.

பிகார் பேரவைத் தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 208 தொகுதிகளிலும் மகாகத்பந்தன் கூட்டணி 28 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புது வெள்ளை மழை பொழிகின்றது... ரஜிஷா விஜயன்!

கடல் என் பார்வையில்... ரைசா வில்சன்!

மஹுவா தொகுதி: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தோல்வி

“திமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வராக முடியுமா?” சேகர்பாபுவுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

உக்ரைன் தலைநகரில் ரஷியா பயங்கர தாக்குதல்! 6 பேர் பலி; 35 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT