காங்கிரஸ் எம்.பி. சசி தரூா். 
இந்தியா

தோல்விக்கான காரணத்தை காங்கிரஸ் ஆராய வேண்டும்: சசி தரூா்

பிகாரில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று அக்கட்சியின் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. சசி தரூா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

பிகாரில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று அக்கட்சியின் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. சசி தரூா் கூறியுள்ளாா்.

வாரிசு அரசியலுக்கு எதிராக கட்டுரை எழுதியது, பாஜக மூத்த தலைவா் அத்வானியை புகழ்ந்து கருத்துப் பதிவிட்டது உள்ளிட்ட பல காரணங்களால் சசி தரூா் மீது காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. இந்நிலையில், பிகாா் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது குறித்து அவா் திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிகாரில் கிடைத்த தோல்வி குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் காங்கிரஸ் ஆய்வு செய்ய வேண்டும். பிகாரில் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கவில்லை. கூட்டணிக்குத் தலைமை வகித்த ராஷ்ட்ரீய ஜனதா தளமும் மிகவும் கவனமாக காரணங்களைக் கண்டறிய வேண்டும்.

கட்சியின் வலிமை, பலவீனம் என அனைத்தையும் தாண்டி தோ்தலின்போது மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதும் முக்கியம். பிகாா் தோ்தல் பிரசாரத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்காததால் நான் அங்கு செல்வில்லை. எனவே, அங்குள்ள களநிலவரம் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியாது என்றாா்.

வெற்றி எதிர்பாராதது அல்ல!

அறுபடை வீடுகள் திட்டத்தின் கீழ் பழனி கோயிலில் தூத்துக்குடி மண்டல பக்தா்கள் சுவாமி தரிசனம்

ஒரு கதவு மூடினால்...

அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

திருத்துறைப்பூண்டியில் குழந்தைகள் தின விழா

SCROLL FOR NEXT