பிகாரின் மஹுவா தொகுதியில் லாலுவின் மகன் தேஜ் பிரதாப் தோல்வியை தழுவினார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டு வருகின்றன. அதில் மஹுவா தொகுதியில் போட்டியிட்ட லாலு பிரசாத்தின் மூத்த மகனும் ஜனசக்தி ஜனதா தளத் தலைவருமான தேஜ் பிரதாப் தோல்வியைச் சந்தித்தார்.
அவர் 35,703 வாக்குகளைப் பெற்று 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஞ்சய் குமார் சிங்(ராம் விலாஸ்) 87,641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதேசமயம் ஆர்.ஜே.டியின் முகேஷ் ரௌஷன் 42,644 வாக்குகளுடன் 2ஆம் இடம் பிடித்தார்.
கடந்த மே மாதம் தேஜ் பிரதாப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘ஓா் இளம் பெண்ணுடன் தொடா்பில் இருப்பதாக’ கூறியதுடன், அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா்.
இதையடுத்து, தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக லாலு பிரசாத் அறிவித்தாா்.
இதனால் ஜனசக்தி ஜனதா தளம் என்ற பெயரில் புதிய கட்சியை அண்மையில் தொடங்கிய தேஜ் பிரதாப், மஹுவா தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.